Saturday 14 January 2017

கோடைகால சருமம்

காலையில் 10 மணி முதல் 4 மணி வரை சூரிய கதிர்கள் கடுமையாக இருப்பதால் அவை சருமத்தை கருமையாக்குகிறது. எனவே சருமத்தில் சன்ஸ்க்ரீன் லோஷன் தடவுவதன் மூலம் சருமம் கருமையாகாமல் தடுக்கலாம். அதிலும் குறிப்பாக SPF30 அல்லது SPF15-30 ஐ கொண்டுள்ள சன்ஸ்க்ரீன் லோஷனை பயன்படுத்தவும். ஸ்க்ரப்பிங் ( Scrubbing) : சருமத்தில் இறந்த சரும செல்கள் இருப்பதால், நமது சருமத்தின் தோற்றத்தை மங்கலாக்குகிறது. எனவே பாதாம் பவுடர் அல்லது உலர்ந்த ஆரஞ்சு பழத்தோலின் சிறு சிறு துண்டுகள், சிறிது பன்னீர் மற்றும் சிறிது கோதுமை மாவை கலந்து முகத்தில் ஸ்க்ரப் செய்ய முகம் தூய்மையடையும். கோடைக்காலங்களில் தினமும் எலுமிச்சை சாறை சருமத்தில் தடவி வர சருமம் தூய்மையாகவும் சீராகவும் இருக்கும். சருமத்தில் வேர்க்குரு வராமல் தடுக்க காட்டன் ஆடைகளை உடுத்தவும். குடை, கண்ணாடி ( sunglass) போன்றவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் சூரிய கதிர்கள் சருமத்தில் படுவதை தடுக்கலாம். உதடுகள் வறண்டு போகாமல் இருக்க, லிப் பாம் ( lip balm) தடவவும் கோடைக்காலத்திற்கேற்ற உணவுகளைச் சாப்பிடவும். இவ்வாறு சாப்பிடுவதன் மூலம் உடல் குளுமையாகவும், தோலில் அலர்ஜி, அம்மை, கட்டி போன்றவை வராமலும் தடுக்கலாம். உடலில் வேர்க்குரு, வேனிற்கட்டி ( sun burn) ஏற்பட்டால், சோற்று கற்றாழையை ( aloe vera) தடவவும். வெள்ளரிக்காய் ( cucumber) சாறையும், தர்பூசணிப்பழத்தின் ( watermelon) சாறையும் சம அளவில் கலந்து முகத்தில் தடவி, முகத்தில் உள்ள உஷ்ணத்தை நீக்கலாம்.

No comments:

Post a Comment