Wednesday, 25 January 2017

Calendar

Calendar 2017 - Install from this link - https://play.google.com/store/apps/details?id=com.dss.calender2017

Saturday, 14 January 2017

கூந்தல் பராமரிப்பு

கூந்தலுக்கு சூடான எண்ணெய் மசாஜ், வல்லாரை, மருதாணி, செம்பருத்தி பூ, ஹென்னா மற்றும் த்ரிப்லா மாஸ்க்களைப் போட்டு கூந்தல் வளர்ச்சியை அதிகமாக்கலாம். கூந்தல் பற்றிய பிரச்சனைகளை சொல்ல ஆரம்பித்தால் சொல்லிக் கொண்டே போகலாம். ஏனெனில் அந்த அளவு பிரச்சனைகள் உள்ளன. அதிலும் குறிப்பாக கூந்தல் உதிர்தல் யாருக்கெல்லாம் உள்ளது என்று கேட்டால் இல்லையென்று சொல்பவர்களை பார்க்கவே முடியாது. மேலும் சிலர் பொடுகுத் தொல்லையால் பாதிக்கப்பட்டிருப்பர். அதற்கு எத்தனையோ சிகிச்சைகளை மேற்கொண்டிருப்பார்கள். இருப்பினும் அதற்கான முடிவு இது தான் என்று கூற முடியாது. இந்த பிரச்சனையை தீர்க்க ஒரே வழியென்றால், அது முறையான பராமரிப்பு தான். இந்த பராமரிப்புகளை சரியாக மேற்கொண்டு வந்தால் கூந்தல் உதிர்தல், பொடுகுத் தொல்லை போன்ற பிரச்சனைகளை அறவே தவிர்க்கலாம். அந்த மாதிரியான கூந்தல் பராமரிப்பிற்கு முக்கியமானது என்றால் அது இயற்கையான பொருட்களை வைத்து ஹேர் பேக்குகள் போடுவது தான். வல்லாரை மற்றும் மருதாணி மாஸ்க் : வல்லாரை ஆயுர்வேத மருத்துவத்தில் அதிகம் பயன்படுகிறது. அதிலும் இந்த மாஸ்க் நினைவு சக்தியை அதிகரிப்பதோடு, கூந்தலுக்கு மிகவும் ஆரோக்கியத்தையும் தரும். அதிலும் கூந்தல் வளர்ச்சியை அதிகரித்தல், முடியை கருமையாக வைப்பது மற்றும் கூந்தல் உதிர்தலை தடுத்தல் போன்றவற்றில் சிறந்ததாக உள்ளது. அதற்கு வல்லாரை பவுடரை, ஹென்னா பவுடருடன் சேர்த்து, தயிர் ஊற்றி கலந்து, கூந்தலில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் ஷாம்பு போட்டு, குளிக்க வேண்டும். முக்கியமாக, இந்த பேக் போடும் முன், தலைக்கு தேங்காய் அல்லது பாதாம் எண்ணெயால் மசாஜ் செய்ய வேண்டும். செம்பருத்தி பூ மாஸ்க் : இந்த மாஸ்க்கில் இரண்டு செம்பருத்தி பூவை, இரவில் படுக்கும் முன் ஒரு கப் நீரில் ஊற வைத்து, காலையில் அதனை அரைத்து, 1/4 கப் ஆலிவ் ஆயில் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் பாலுடன் சேர்த்து கலந்து, கூந்தல் மற்றும் ஸ்கால்ப்பில் படும் படியாக தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ச்சியான நீரில் அலச வேண்டும். சூடான எண்ணெய் மசாஜ் : கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க எண்ணெய் மசாஜை விட சிறந்தது வேறு எதுவுமில்லை. எனவே கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க வேண்டுமெனில், எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, தலைக்கு மசாஜ் செய்து குளிக்க வேண்டும். அதுவே பொடுகுத் தொல்லை இருப்பவர்கள், எண்ணெயில் சிறிது எலுமிச்சை சாற்றை விட்டு, வாரதத்திற்கு 2 முறை செய்து வந்தால், கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கலாம். ஹென்னா மாஸ்க் : ஹென்னா எனப்படும் மருதாணி கூந்தலை அடர்த்தியாகவும், நீளமாகவும், பட்டுப் போன்றும் வளரச் செய்யும். எனவே இந்த மருதாணியை மூலப்பொருளாக கொண்டு, அத்துடன், கறிவேப்பிலை, செம்பருத்தி இலைகள் மற்றும் வெந்தயம் சிறிது சேர்த்து நன்கு பேஸ்ட் செய்து, சிறிது தயிர் ஊற்றி, கூந்தல் மற்றும் ஸ்கால்ப்பில் தடவி, 40 நிமிடம் ஊற வைத்து, பின்னர் குளிர்ந்த நீரில், ஷாம்பு போட்டு அலச வேண்டும். த்ரிப்லா மாஸ்க் ( Triphala Mask): இந்த மூலிகை ஹேர் மாஸ்க்கை வீட்டிலேயே ஈஸியாக செய்யலாம். அதற்கு த்ரிப்லா எனப்படும் நெல்லிக்காய், கடுக்காய் மற்றும் பூந்திக்கொட்டை ஆகியவற்றால் செய்யப்பட்ட பொடியுடன், வல்லாரை மற்றும் துளசியை சேர்த்து அரைத்து, தலையில் தடவி, 30 நிமிடம் ஊற வைத்து, ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும்.

கோடைகால சருமம்

காலையில் 10 மணி முதல் 4 மணி வரை சூரிய கதிர்கள் கடுமையாக இருப்பதால் அவை சருமத்தை கருமையாக்குகிறது. எனவே சருமத்தில் சன்ஸ்க்ரீன் லோஷன் தடவுவதன் மூலம் சருமம் கருமையாகாமல் தடுக்கலாம். அதிலும் குறிப்பாக SPF30 அல்லது SPF15-30 ஐ கொண்டுள்ள சன்ஸ்க்ரீன் லோஷனை பயன்படுத்தவும். ஸ்க்ரப்பிங் ( Scrubbing) : சருமத்தில் இறந்த சரும செல்கள் இருப்பதால், நமது சருமத்தின் தோற்றத்தை மங்கலாக்குகிறது. எனவே பாதாம் பவுடர் அல்லது உலர்ந்த ஆரஞ்சு பழத்தோலின் சிறு சிறு துண்டுகள், சிறிது பன்னீர் மற்றும் சிறிது கோதுமை மாவை கலந்து முகத்தில் ஸ்க்ரப் செய்ய முகம் தூய்மையடையும். கோடைக்காலங்களில் தினமும் எலுமிச்சை சாறை சருமத்தில் தடவி வர சருமம் தூய்மையாகவும் சீராகவும் இருக்கும். சருமத்தில் வேர்க்குரு வராமல் தடுக்க காட்டன் ஆடைகளை உடுத்தவும். குடை, கண்ணாடி ( sunglass) போன்றவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் சூரிய கதிர்கள் சருமத்தில் படுவதை தடுக்கலாம். உதடுகள் வறண்டு போகாமல் இருக்க, லிப் பாம் ( lip balm) தடவவும் கோடைக்காலத்திற்கேற்ற உணவுகளைச் சாப்பிடவும். இவ்வாறு சாப்பிடுவதன் மூலம் உடல் குளுமையாகவும், தோலில் அலர்ஜி, அம்மை, கட்டி போன்றவை வராமலும் தடுக்கலாம். உடலில் வேர்க்குரு, வேனிற்கட்டி ( sun burn) ஏற்பட்டால், சோற்று கற்றாழையை ( aloe vera) தடவவும். வெள்ளரிக்காய் ( cucumber) சாறையும், தர்பூசணிப்பழத்தின் ( watermelon) சாறையும் சம அளவில் கலந்து முகத்தில் தடவி, முகத்தில் உள்ள உஷ்ணத்தை நீக்கலாம்.

அழகு சருமம்

இத்தலைமுறையினர் வெளிப்புற அழகிற்கு அதிக முக்கியத்துவம் தருகிறார்கள். ஒருவரின் வெளிதோற்றத்தை வைத்து அவர்களின் திறமையை கணக்கிட கூடாது என்றாலும், பெருன்பான்மையானவர்கள் பிறரின் முக அழகு, சரும நிறம் ஆகியவற்றை வைத்துதான் மக்களை எடை போடுகிறார்கள். பெண்களுக்கான அழகு பொருட்களை பொருத்தவரை அதிகமாக விற்பனை ஆவது சரும நிறத்தை சிகப்பாக்கும் முக பூச்சுகள்தான். இப்போது பெண்களோடு போட்டிபோட்டுக்கொண்டு ஆண்களும் சரும நிறத்தை மாற்ற இவ்வகையான கிரீம்களை உபயோகிப்பதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இப்படி சிகப்பு நிறத்தின் மீது தீராத மோகம் கொண்டுள்ளவர்களுக்காக சில எளிய டிப்ஸ ்.... சுத்தமான சந்தனத்தை பாதாம் எண்ணெய்யில் குழைத்து முகத்தில் பூசி, இந்த கலவை காய்ந்ததும் முகத்தை கழுவலாம் . தக்காளியை நன்றாக பிசைந்து அதனோடு 4 - 5 துளிகள் எலுமிச்சை சாறு கலந்து முகம், கழுத்து பகுதி, கைகளில் பூசிக்கொள்ளலாம். முகத்தை கழுவியபிறகு சிறிதளவு பாலை உள்ளங்கையில் எடுத்து முகத்தில் பூசவும். இவ்வாறு தொடர்ந்து 2 - 3 வாரங்கள் வரை செய்துவந்தால் உங்கள் சருமம் பொலிவடைந்திருப்பது கண்கூடாக தெரியும். சிறிதளவு இளநீரை முகம், கழுத்து பகுதி, கைகளில் பூசிவந்தால் சரும நிறம் மாறும். சீரகம் மற்றும் முள்ளங்கியை ஆகியவற்றை தனித்தனியே தண்ணீரில் கொதிக்கவைத்து, அந்த தண்ணீரில் முகத்தை கழுவினால் மாசுகள் அகற்றப்பட்டு முகம் பிரகாசமாக தோன்றும். புதினா மற்றும் எலுமிச்சை சாறுகளை கலந்து முகத்தில் தடவலாம் முட்டையின் வெள்ளை கருவை வாரம் இருமுறை முகத்தில் பூசிவந்தால் சரும நிறம் சிகப்பாக மாறுவதோடு மிருதுவாகவும் மாறும். அன்னாசி பழத்தின் சாறு, தர்பூசிணி மற்றும் பப்பாளி பழ சாறுகளும் சரும நிறத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.